போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புஆணையரகத்தின் முக்கியப் பணிகள்
ஓட்டுநர் உரிமங்கள், நடத்துநர் உரிமங்கள் புதியதாக வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் மேற்குறிப்பு செய்தல்
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமம் வழங்குதல் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை ஆய்வு செய்தல்
வாகனங்களைப் பதிவு செய்தல், வாகனங்களை மறுபதிவு செய்தல் மற்றும் வாகன பதிவினைப் புதுப்பித்தல்
வாகனங்களில் உரிமம் மாற்றம் செய்தல், பதிவுச் சான்றிதழில் தவணைக்கொள் முதல் மேற்குறிப்பு செய்தல், இரத்துச் செய்தல்
வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல்
போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு உரிமம் மாற்றம் செய்தல்
போக்குவரத்து வாகனங்களுக்கு மாற்று அனுமதிச்சீட்டு வழங்குதல்
நிலைப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளுக்கு வழித்தடங்கள் மாற்றுதல்
போக்குவரத்து வாகனங்களுக்கு தற்காலிக அனுமதிச் சீட்டு வழங்குதல்
வாகனங்களுக்கு வரி மற்றும் கட்டணங்கள் வசூலித்தல்
மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநிலங்களின் எல்லையில் வாகனங்களை இயக்குதல்
பிற மாநில வாகனங்கள் இம் மாநிலத்தில் நழையும் போது சோதனைச் சாவடியில் தற்காலிக அனுமதிச் சீட்டு வழங்குதல்
விபத்துக்குள்ளாகும் வாகனங்களை ஆய்வு செய்தல்
மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதிகளை அமுல்படுத்துதல் மற்றும் வாகனங்களை ஆய்வு செய்தல்
தகுதிச் சான்றிதழ் இல்லாமலும் மற்றும் வாகன வரி கட்டாமலும் ஓடும் வாகனங்களை சிறைப் பிடித்தல்
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளின் போதும், வெள்ளம் , தேர்தல் நேரம் போன்ற இயற்கை பேரழிவுகளின் போதும் மாவட்ட நிருவாகம் மற்றும் காவல்துறைக்கு வாகனங்களை வழங்குவதில் உதவுதல்
காற்று மாசுபடாமல் இருப்பதற்கு வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினை ஆய்வுசெய்தல்
மாசுகட்டுப்பட்டினை சோதனை செய்யும் மையங்களுக்கு உரிமம் வழங்குதல்
மாவட்டப் பாதுகாப்புக்குழுவின் நடவடிக்கைகளை கண்காணித்தல்
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து நடைபெறும் பகுதிகளைக் கண்டறிதல் மற்றும் சாலை சீரமைப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தல்