18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பழகுநர் ஓட்டுநர் உரிமம் https://sarathi.parivahan.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். உங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்/ மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அஞ்சல் குறியீடு உதவியுடன் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் எல்எல்ஆருக்கு நேரடியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் இணையவழி தடம் சுய வழிகாட்டியாக தேவையான அனைத்து தகவல்களையும் நிரப்ப வேண்டும்.முகவரிச் சான்று, வயது சான்று மற்றும் மருத்துவச் சான்றிதழ் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் நீங்கள் பதிவேற்ற வேண்டும்.